தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடப் போவதாக தனது நிர்வாகிகளிடம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமையலாம் என்று நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “234 தொகுதிகளிலும் தனித்து நின்று நமது பலத்தை நிரூபிப்போம்” என அவர் பேசியிருப்பது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

​அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் கட்சியின் வாக்கு சதவீதத்தை உயர்த்தி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற முடியும் என்பதே விஜய்யின் கணக்காக இருக்கிறது. இதற்காகத் தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகளை ஏற்கனவே அவர் தொடங்கிவிட்டதாகவும், இதற்காக ஒரு பிரத்யேகக் குழு அமைக்கப்பட்டுத் தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.