கடந்த 2016 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்திற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருதுகளில், சமூகக் கருத்துகளை முன்வைத்த மற்றும் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட பல்வேறு திரைப்படங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
அதன்படி, 2016-ஆம் ஆண்டுக்கு ‘மாநகரம்’, 2017-க்கு ‘அறம்’, 2018-க்கு ‘பரியேறும் பெருமாள்’ ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களுக்கான முதற்பரிசை வென்றுள்ளன.
மேலும், 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2020-ஆம் ஆண்டுக்கு ‘கூழாங்கல்’, 2021-ஆம் ஆண்டுக்கு சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக ‘கார்க்கி’ ஆகிய படங்கள் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளன.
மேலும் கலைத்துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருதுகள், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன
.
