தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டுச் சொந்த ஊருக்குச் செல்லும் மக்களின் வசதிக்காகச் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை இரவு 11.45 மணிக்குச் சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு ஒரு ரயில் புறப்படுகிறது. அதேபோல், ஜனவரி 31-ஆம் தேதி இரவு 11.50 மணிக்குத் தாம்பரத்திலிருந்து தூத்துக்குடிக்குச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

​இந்த ரயில்கள் மறுமார்க்கத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி இரவு நெல்லை மற்றும் தூத்துக்குடியிலிருந்து மீண்டும் சென்னைக்குத் திரும்பும். கூட்ட நெரிசலில் சிக்காமல் நிம்மதியாகப் பயணம் செய்ய விரும்புபவர்கள் இப்போதே ஆன்லைனில் முன்பதிவு செய்து தங்களின் இருக்கையை உறுதி செய்து கொள்ளலாம்.