உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் தெருவோரக் கடை ஒன்றில் ஜப்பானிய பாரம்பர்ய தேநீர் வகையான மட்சா முற்றிலும் இந்திய பாணியில் தயாரிக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. வழக்கமாக ஜப்பானிய முறைப்படி மட்சா தேநீர் மிகவும் நிதானமாக மூங்கில் குச்சிகளைக் கொண்டு தயார் செய்யப்படும் நிலையில், இங்குள்ள வியாபாரி இதனை நமது ஊர் சாதாரண தேநீரைப் போல பெரிய பாத்திரத்தில் இட்டு ஆவி பறக்கக் கொதிக்க வைத்துத் தயாரிக்கிறார்.
View this post on Instagram
மேலும், இதனைச் சாதாரணக் கோப்பைகளில் வழங்காமல் களிமண்ணால் செய்யப்பட்ட மண்குடுவைகளில் ஊற்றி வழங்குகிறார். இதனைப் பார்த்த இணையவாசிகள் பலரும் ஜப்பானிய கலாசாரம் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளதாகக் கருத்துத் தெரிவித்து வரும் அதே வேளையில், எந்த ஒரு வெளிநாட்டு உணவையும் இந்திய மயமாக்குவதில் இந்தியர்களுக்கு நிகர் எவருமில்லை என வேடிக்கையாகப் பதிவிட்டு வருகின்றனர்.
இருப்பினும், மட்சா தேநீரைக் கொதிக்க வைத்தால் அதன் மருத்துவக் குணங்கள் மற்றும் சுவை மாறிவிடும் என ஆரோக்கிய ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
