ரயிலில் பயணம் செய்யும் சிறுவர்கள் இருவர் அங்குள்ள விளக்குகளைத் தொடர்ந்து இயக்கி விளையாடும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 14 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், இரண்டு சிறுவர்கள் ரயில் பெட்டியில் பயணிகள் படிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் விளக்குகளை ஒரு விளையாட்டுப் பொருள் போலக் கருதி மீண்டும் மீண்டும் அணைத்தும் எரிய விட்டும் விளையாடுகின்றனர்.

 

இதனால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டும், அங்கிருக்கும் பெரியவர்களோ அல்லது அவர்களது பெற்றோரோ அதனைத் தடுக்க முன்வராதது பலரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. பொது இடங்களில் நடந்துகொள்ள வேண்டிய அடிப்படை ஒழுக்க முறைகளைத் தங்கள் குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் விமர்சிக்கும் நிலையில், சிறுவர்கள் ஆர்வத்தில் செய்வதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்று மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.