ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மின்கி சர்மா (30) என்பவர் எச்.ஆர் மேலாளராகப் பணியாற்றி வந்தார். அதே அலுவலகத்தில் வினய் (30) என்பவர் கணக்காளராக (Accountant) வேலை பார்த்துள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மலர்ந்துள்ளது.

வினய்யின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மின்கி, அவரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியுள்ளார். ஆனால், வினய் அவரைத் தொடர்ந்து திருமணம் செய்ய வற்புறுத்தி ‘டார்ச்சர்’ கொடுத்துள்ளார். கடந்த 24-ம் தேதி மின்கி மாயமானதை அடுத்து, போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

போலீசார் வினய்யைப் பிடித்து விசாரித்தபோது, அவர் அளித்த வாக்குமூலம் நெஞ்சைப் பதற வைத்தது:

 “என்னைத் திருமணம் செய்ய முடியாது” என்று மின்கி உறுதியாகச் சொன்னதால், ஆத்திரமடைந்த வினய் இளநீர் வெட்டும் கத்தியால் அவரைத் தாக்கியுள்ளார்.

மின்கி உயிரிழந்த பிறகும் ஆத்திரம் தீராமல், அவரது தலையைத் துண்டித்துள்ளார். பின்னர் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து ‘டேப்’ மூலம் பார்சல் செய்துள்ளார்.

உடலை ஒரு இடத்திலும், தலையை மற்றொரு கருப்பு பையில் வைத்து ஒரு கால்வாயிலும் வீசியுள்ளார். தற்போது போலீசார் மின்கியின் உடலை மீட்டுள்ளனர், தலையைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.