பிரபல நடிகர் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி மற்றும் அதிதி ராவ் ஆகிய மூவர் கூட்டணியும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘காந்தி டாக்ஸ்’. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் கிஷோர் பி பெல்லேக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், வசனங்கள் எதுவுமின்றி முழுமையான ‘மெளனப் படமாக’ (Silent Movie) தயாராகியுள்ளது. ‘டார்க் காமெடி’ ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மெளனப் படம் என்பதால், இப்படத்தின் பின்னணி இசை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

மேலும் மகாத்மா காந்தியின் நினைவு தினமான வரும் ஜனவரி 30-ஆம் தேதி ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது