சிரஞ்சீவி நடிப்பில் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெளியான ‘மன சங்கர வர பிரசாத் காரு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் பேசிய சிரஞ்சீவி, “திரைத்துறையில் காஸ்டிங் கவுச் (பாலியல் துன்புறுத்தல்) என்பதே கிடையாது; சினிமா என்பது ஒரு கண்ணாடி போன்றது, நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ அதையே அது பிரதிபலிக்கும்” என்று கூறினார். மேலும், பெண்கள் கண்டிப்புடனும், தொழில்முறை ஒழுக்கத்துடனும் இருந்தால் யாரும் அவர்களைத் தவறாகப் பயன்படுத்த முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
Casting couch is rampant, women are refused roles if they don’t offer ‘full commitment’ – a word that means completely different in the film industry.
If you come from an English educated background and believe ‘commitment’ means ‘professionalism’, showing up to work and being…
— Chinmayi Sripaada (@Chinmayi) January 26, 2026
சிரஞ்சீவியின் இந்தக் கருத்துக்குப் பாடகி சின்மயி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “காஸ்டிங் கவுச் என்பது திரையுலகில் மிக மோசமாக வேரூன்றியுள்ள ஒரு பிரச்சனை; படுக்கைக்கு சம்மதித்தால் மட்டுமே வாய்ப்பு என்ற நிலை பல இடங்களில் இப்போதும் இருக்கிறது” என்று அவர் சாடியுள்ளார். சிரஞ்சீவி பழமையான காலத்தில் இருந்த மரியாதையான திரையுலகைப் பார்த்துவிட்டுப் பேசுகிறார் என்றும், ஆனால் இன்றைய யதார்த்தம் மிகவும் கசப்பானது என்றும் கூறியுள்ள சின்மயி, வைரமுத்து போன்றவர்களால் தாம் எதிர்கொண்ட துன்புறுத்தல்களையும் மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.
