பீகார் மாநிலம் முங்கேர் மாவட்டத்தில், 10-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் செயலைச் செய்தது அந்தப் பெண்ணின் தூரத்து உறவினரான 24 வயது இளம்பெண் (அத்தை முறை) என்பதுதான் இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. அந்தப் பெண், மாணவியைத் தவறான உறவுக்கு வற்புறுத்தியதாகவும், அதற்கு அந்தச் சிறுமி மறுப்பு தெரிவித்ததால், சிறுமியின் கழுத்தில் இருந்த ருத்ராட்ச மாலையாலேயே அவர் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டதாகவும் சிறுமியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

​கொலை செய்யப்பட்ட மாணவி இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதவிருந்தவர். அந்த இளம்பெண் ஏற்கனவே பல சிறுமிகளுக்கு பண உதவி செய்வதாக ஆசை காட்டி அவர்களைத் தவறான பாதையில் ஈடுபடுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு உண்மைகளும் தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.