தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் கடைசி திரைப்படமான ‘தளபதி 69’ (ஜனநாயகன்) குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கௌரவத் தோற்றத்தில் நடித்திருப்பதை அவரே உறுதி செய்துள்ளார்.

தணிக்கை சிக்கல்கள் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போய்யுள்ள சூழலில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ்,

“விஜய் அண்ணாவும், இயக்குனர் வினோத் அண்ணாவும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அரசியல் பயணத்திற்கு முன்னதாக விஜய் நடிக்கும் இறுதிப் படம் என்பதால், இதில் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.