தெலுங்கானா மாநிலம் நாம்பள்ளி பகுதியில் பர்னிச்சர் ஷோரூம் பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த பிரணீத் (11), அகில் (7), பீபி (55), முகமது இம்தியாஸ் (27), சையத் ஹபீப் (40) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெறும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
