தன் மகளைப் பள்ளியில் அடிக்க வேண்டாம் என்று ஒரு தந்தை ஆசிரியருக்கு எழுதிய உருக்கமான கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடிதத்தில், தனது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், தாயில்லாமல் வளரும் தனது மகள் மிகவும் மென்மையான குணம் கொண்டவள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தவறு செய்தாலும் அவளை அடிக்க வேண்டாம் என்றும், அன்பால் திருத்த முயலுமாறும் அவர் விடுத்த வேண்டுகோள் பார்ப்பவர் நெஞ்சை நெகிழச் செய்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு குழந்தையின் மனநிலையைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

“>

இதனால் தந்தையின் அக்கறையை ஒரு தரப்பினர் பாராட்டும் அதே வேளையில், பள்ளிகளில் இன்றும் தொடரும் உடல் ரீதியான தண்டனைகள் ‘ஆழ்ந்த கவலை அளிப்பதாக’ சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குழந்தைகளின் கல்விச் சூழல் அச்சமற்றதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது.