லண்டனின் ஹவுன்ஸ்லோ பகுதியில் 16 வயது சீக்கிய சிறுமி ஒரு கும்பலால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பின்னணியைக் கொண்ட ஒரு கும்பல், சிறுமிகளிடம் நட்பாகப் பழகி அவர்களைத் தங்கள் வலைக்குள் வீழ்த்தி இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு 200-க்கும் மேற்பட்ட சீக்கிய அமைப்பினர் திரண்டு சென்று போராட்டம் நடத்தியதை அடுத்து, காவல்துறையினர் அங்கு விரைந்து சிறுமியை மீட்டனர். இந்த கும்பல் நீண்டகாலமாக சட்டத்தின் பிடியில்இருந்து தப்பித்து வந்த நிலையில், தற்போது முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து முழுவதும் ரோதர்ஹேம், ரோச்டேல் போன்ற நகரங்களில் சிறுமிகளுக்கு எதிராகத் தொடரும் இத்தகைய கும்பல் பலாத்காரச் சம்பவங்கள் பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளன. காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டிய நிலையில், எலான் மஸ்க் போன்ற உலகப் புகழ்பெற்ற நபர்களும் இங்கிலாந்து அரசின்மெத்தனப் போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
<a href=”http://

“>
ஆயிரக்கணக்கான சிறுமிகள் இது போன்ற கும்பல்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்க, தேசிய அளவில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் கீர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார். பள்ளி செல்லும் குழந்தைகளைப் பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கவும் அந்நாட்டு மக்கள் தற்போது தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.