வீடுகளில் சிறு குழந்தைகள் இருந்தால் அங்கே குறும்புத்தனங்களுக்குப் பஞ்சம் இருக்காது. அப்படி ஒரு சுட்டித்தனமான சிறுவன், தனது வீட்டு நாய்க்குச் செய்த ‘ஹேர் ஸ்டைல்’ இப்போது சோசியல் மீடியாவில் செம வைரல்.

தனது செல்ல நாயுடன் ஒரு அறையில் அந்தச் சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது, உள்ளே இருந்து எலக்ட்ரிக் ரேசர் (Electric Razor) சத்தம் கேட்பதைக் கண்டு அந்தத் தாய் பதறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Remigius John (@remigiusj)

உள்ளே சென்று பார்த்த தாய்க்குத் தூக்கிவாரிப் போட்டது. அந்தச் சிறுவன் கையில் ரேசரை வைத்துக்கொண்டு, எதார்த்தமாகத் தனது செல்ல நாயின் தலைப்பகுதி முழுவதையும் மொட்டை அடித்துவிட்டான். முடியெல்லாம் மழிக்கப்பட்டு, “எனக்கு ஏன் இப்படி ஆச்சு?” என்பது போல அந்த நாய் கொடுத்த ரியாக்‌ஷன் பார்ப்பவர்களைச் சிரிக்க வைத்துள்ளது.

முதலில் அதிர்ச்சியடைந்த அந்தத் தாய், பின்னர் தனது மகனின் மழலைத்தனமான இந்தச் செயலையும், அந்த நாயின் பரிதாப முகத்தையும் பார்த்துச் சிரிக்கத் தொடங்கிவிட்டார். “பாவம் அந்த நாய்.. இனிமே அது எப்படி வெளியே தலைகாட்டும்?” என நெட்டிசன்கள் இந்த வீடியோவை ஜாலியாகப் பகிர்ந்து வருகின்றனர்.