தென்னாப்பிரிக்காவின் கவுடெங் (Gauteng) மாகாணத்தில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்து ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜோகன்னஸ்பர்க் நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் மினி பேருந்து, லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இன்று காலை 7 மணியளவில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. மினி பேருந்து மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் 11 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் 2 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகினர். விபத்து நடந்த இடத்தில் சிதறிக் கிடந்த பள்ளிப் புத்தகங்களையும், பைகளையும் பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதது பார்ப்பவர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.