இந்தூர் மாகாணத்தின் சராஃபா பகுதியில் பிச்சையெடுத்த மாற்றுத்திறனாளி ஒருவரை மீட்புக் குழுவினர் விசாரித்தபோது அவர் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி என்பது தெரியவந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாங்கி லால் என்ற அந்த நபர் பல ஆண்டுகளாக மரத்திலான தள்ளுவண்டி மற்றும் கைகளை ஊன்றி வீதிகளில் பிச்சையெடுத்து வந்துள்ளார். இவரது பரிதாப நிலையைக் கண்டு அரசு சார்பில் ஏற்கனவே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இவருக்கு சொந்தமாக மூன்று வீடுகள் மற்றும் மூன்று ஆட்டோக்கள் இருப்பதுடன் ஒரு விலையுயர்ந்த கார் வைத்திருப்பதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இவர் தினசரி ஐந்நூறு ரூபாய் வரை பிச்சையாகப் பெறுவதுடன் அந்தப் பகுதியில் உள்ள பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது. பிச்சையெடுப்பதே தொழிலாகக் கொண்ட இந்த நபரிடம் இருந்து கூடுதல் தகவல்களைப் பெற அதிகாரிகள் தற்போது மேலதிக நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளனர்.
