மேற்கு வங்க மாநிலம் மால்டாவில், பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையைத் தொடங்கி வைக்க உள்ள நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், சில சிறுவர்கள் ரயில்வே தண்டவாளங்கள் அருகே நின்று கொண்டு கற்களை வீசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்தச் சிறுவர்கள் திட்டமிட்டே இத்தகைய வன்முறைச் செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாட்டின் அதிநவீன ரயில் சேவை முடக்கப்படுவதற்கான சதித்திட்டமாக இது பார்க்கப்படுவதால், இந்தப் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

“>

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படை ஆர்.பி.எஃப் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில்வே சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்று ஆர்.பி.எஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறிப்பாக, சிறுவர்களை இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்ய கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.