புதுச்சேரியில் சமீபத்தில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பவரால் தொடங்கப்பட்ட ‘லட்சிய ஜனநாயக கட்சி’ (LJK), ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், எல்.ஜே.கே கட்சிக்கு இரண்டு இடங்களை ஒதுக்க முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் புதுச்சேரி தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே புதுச்சேரியில் விஜய் தொடங்கியுள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK), என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பலமாகப் பேசப்பட்டது. ஆனால், இப்போது எல்.ஜே.கே கட்சியுடன் என்.ஆர்.காங்கிரஸ் கைக்கோர்க்கத் திட்டமிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடீர் அரசியல் திருப்பம், வரும் தேர்தலிலில் கூட்டணிக் கணக்குகளை மொத்தமாக மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
