தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைந்த ஐந்தே நாட்களில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான அதியமான் மீண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலேயே (விசிக) இணைந்துள்ளார்.

நடிகர் விஜய் முன்னிலையில் கடந்த வாரம் தவெக-வில் இணைந்த இவர், தற்போது சென்னையில் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து மீண்டும் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கடலூர் மாவட்டத்தில் விசிக-வின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய மண்டலச் செயலாளர் அதியமானின் இந்தத் திடீர் கட்சித் தாவல், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தவெக-வில் இணைந்த ஒரே வாரத்தில் அவர் அங்கிருந்து வெளியேறியது அக்கட்சியின் உயர்மட்ட நிர்வாகியான செங்கோட்டையன் மற்றும் பிற தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.