சர்ச்சைகளுக்குப் பெயர் போன பிரிஜ் பூஷன் சரண் சிங், தனது மகன் கரண் சிங்கிற்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தின் கோண்டா பகுதியில் நடைபெற்ற ‘ராஷ்டிரகதா’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது உயரமான மேடையில் நின்று கொண்டிருந்த அவர், கூட்டத்தைப் பார்த்து நகர்ந்து சென்றபோது திடீரென நிலைதடுமாறி முகக்குப்புற கீழே விழுந்தார்.
BJPs Brij Bhushan Saran Singh fell flat on his face in Gonda, Uttar Pradesh.
Aur kitna girega yeh molestor? pic.twitter.com/0tAxL4hDd6
— ηᎥ†Ꭵղ (@nkk_123) January 9, 2026
சுமார் 30 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவில், அவர் மேடையின் விளிம்பிற்குச் சென்று எதிர்பாராத விதமாகத் தலைகீழாகக் கீழே விழுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதுமே, நெட்டிசன்கள் அவரை வளைத்து வளைத்து வறுத்தெடுத்து வருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இவரைச் சுட்டிக்காட்டி, “ஏற்கனவே மக்கள் மத்தியில் கீழிறங்கிப் போனவர், இப்போது மேடையில் இருந்தும் கீழே விழுந்துவிட்டார்” எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
2024 மக்களவைத் தேர்தலில் இவருக்குப் போட்டியிட சீட் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது தனது மகனுக்காகப் பிரச்சாரம் செய்து வரும் வேளையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
