யானைகள் என்றாலே கம்பீரம்தான், ஆனால் அந்த யானைகளையே தனது அன்பால் கட்டிப்போட்டுள்ளார் இந்த பீனட்! இந்த வயதான நாய், சரணாலயத்தின் சமையலறைக்குள் குறும்புக்கார குட்டி யானைகள் வேலி தாண்டி நுழையாமல் இருக்கக் காவல் காக்கிறது. குட்டி யானைகள் ஏதேனும் சேட்டை செய்தால், பீனட் லேசாகக் குரைத்து எச்சரித்து அவற்றை அங்கிருந்து அகலச் செய்யும்.

பெரிய யானைகள் பீனட்டின் அமைதியான சுபாவத்தை மதித்து, அவர் ஓய்வெடுக்கும்போது அவரைத் தொந்தரவு செய்யாமல் சுற்றிச் செல்லும்.

 

View this post on Instagram

 

A post shared by Lek Chailert (@lek_chailert)

ஆனால், சில குட்டி யானைகள் அவரிடம் விளையாட்டுக்கு வம்பு இழுக்கும். அந்த நேரங்களில் பீனட் சண்டையிடாமல், “நமக்கு எதுக்கு வம்பு?” என்று அமைதியாக அங்கிருந்து நகர்ந்து விடுவார்.

இந்தச் சரணாலயத்தில் உள்ள ஒவ்வொரு யானைக் கூட்டத்திற்கும் ஒரு நாய் நண்பனாக இருக்கிறது. அதில் மிகவும் நேசிக்கப்படும் ஒரு பாதுகாவலனாக பீனட் திகழ்கிறார். விலங்குகளுக்கு இடையேயான இந்த அழகான நட்பு சமூக வலைதளங்களில் பலரது நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது.