உள்ளங்கையில் அடங்கும் வகையில் மிகவும் சிறிய அளவில் இருக்கும் கன்றுக்குட்டி ஒன்றின் காணொளி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு அச்சு அசலாக உண்மை போலவே இருக்கும் இந்தக் கன்றுக்குட்டியின் தோற்றம் பலரையும் வியப்பில் ஆழ்த்தினாலும் இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை காணொளி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

View this post on Instagram

 

A post shared by Jay Pirabakaran (@jayprints)

ஒரு சாதாரண மனிதரின் கைகளில் அமர்ந்திருக்கும் இந்தச் சிறு உயிரினத்தின் நளினமான அசைவுகள் மற்றும் அதன் கண்கள் தரும் தத்ரூபமான உணர்வுகள் எளிய மக்களைக் கவர்ந்ததோடு பலரும் இதனைப் தெய்வீகப் பிறவியாகக் கருதி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் உருவாக்கப்பட்ட இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதார்த்தத்தையும் கற்பனையையும் பிரித்தறிய முடியாத அளவிற்குத் தரம் உயர்ந்துள்ள ஏஐ தொழில்நுட்பத்தின் ஆற்றலுக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.