மனிதர்களின் அன்றாடச் செயல்பாடுகள் எவ்வளவு தூரம் ‘தசை நினைவாற்றல்’ (Muscle Memory) மூலம் வழிநடத்தப்படுகின்றன என்பதை விளக்கும் வகையில் ஒரு சுவாரசியமான ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.

பொறியாளர்கள் ஒரு படிக்கட்டின் உயரத்தை மட்டும் வெறும் ஒரு அங்குலம் அதிகரித்தபோது, அதைப் பயன்படுத்திய பலரும் நிலைதடுமாறித் தடுக்கி விழுந்ததைக் காண முடிந்தது. பொதுவாக நாம் படிக்கட்டுகளில் ஏறும்போது ஒவ்வொரு படியின் உயரத்தையும் கவனிப்பதில்லை; மாறாக, முதல் ஓரிரு படிகளில் ஏறியவுடன் நமது மூளை அந்த உயரத்தைக் கணித்து, அடுத்தடுத்த படிகளுக்குத் தசை நினைவாற்றல் மூலம் கால்களைத் தானாகவே உயர்த்துகிறது.

“>

 

இந்தத் தன்னிச்சையான இயக்கத்தில் ஒரு அங்குல வித்தியாசம் ஏற்பட்டாலும், மூளையின் கணக்கீடு தவறி உடல் சமநிலையை இழக்கிறது. மனித மூளை பழக்கவழக்கங்களுக்கு எவ்வளவு வலிமையாக அடிபணிந்துள்ளது என்பதற்கும், மிகச்சிறிய மாற்றம்கூடப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கும் இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.