சென்னையில் தங்கியிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் குளிக்கும்போது, அவர் தங்கியிருந்த விடுதி ஊழியர் ஜன்னல் வழியாக ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்செய்பதி (19) என்ற அந்த ஊழியர் வீடியோ எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண், உடனடியாக சத்தம் போட்டுவிட்டு வெளியே வந்து அவரது செல்போனைப் பறித்துச் சோதித்தார்.
அந்த ஊழியர் செவிலியரின் வீடியோவை அதற்குள் நீக்கியிருந்தாலும், அவரது செல்போனில் மற்ற பெண்கள் குளிக்கும் பல வீடியோக்கள் இருப்பதைக்கண்டு அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரைக் கைது செய்தனர்.
