இந்தியாவில் நடைபெறவுள்ள தொடரில் பங்கேற்பது வங்கதேச அணியின் தனிப்பட்ட விருப்பம் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் அண்மையில் மக்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்கள் மிகவும் தவறானவை என்று குறிப்பிட்ட அவர், அந்நாட்டு அணி இந்தியா வர விரும்புமா என்பது சந்தேகமே என்று கூறினார். ஐசிசி தான் இது குறித்து இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றும், இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து அணிகளையும் வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

ஏற்கனவே பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வர மறுப்பு தெரிவித்துள்ளதால், அந்த அணி விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளன. தற்போதைய சூழலில் வங்கதேச அணியும் தனது போட்டிகளை இலங்கையில் விளையாடத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் ஆசியக் கண்டத்தின் முக்கிய அணிகள் இந்தியாவுக்கு வருவதில் சிக்கல் நீடித்து வருவது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.