நமோ பாரத் ரயிலைத் தொடர்ந்து, பொதுப் போக்குவரத்து வாகனங்களில் அரங்கேறும் அநாகரிகச் செயல்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய வீடியோவில், ஓடும் ரயிலுக்குள் இளம் ஜோடி ஒன்று மற்ற பயணிகளைப் பற்றிய கவலையின்றி பொது இடத்தில் முகம் சுளிக்கும் வகையில் மிக நெருக்கமாகச் செயல்படுவது பதிவாகியுள்ளது.
டெல்லி மெட்ரோ மற்றும் நமோ பாரத் ரயில்களில் ஏற்கனவே இதுபோன்ற ஆபாசச் சம்பவங்கள் அரங்கேறி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இப்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பொது இடங்களில் இது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.
“ரயில்கள் என்பது குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் பயணம் செய்யும் பொதுவான இடம் என்பதை மறந்துவிட்டு சிலர் இப்படி நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது” எனப் பலரும் தங்களது குமுறல்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, அந்த ஜோடியைக் கண்டறியும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
