பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் அவரது மனைவி ரூபாலி பருவா ஆகியோர் அசாம் மாநிலம் குவகாத்தியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு குவகாத்தியின் ஜூ ரோடு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இரவு உணவை முடித்துவிட்டு, இருவரும் சாலையைக் கடக்க முயன்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Ashish Vidyarthi (@ashishvidyarthi1)

8

அப்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருமே காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டியும் காயமடைந்ததால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் பேசிய ஆஷிஷ் வித்யார்த்தி, தான் நலமுடன் இருப்பதாகவும், தனது மனைவிக்கு மட்டும் கூடுதல் பரிசோதனைகள் தேவைப்படுவதால் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், இந்தச் சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கில்லி, தூள், ஆறு போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் தனது மிரட்டலான நடிப்பால் முத்திரை பதித்த ஆஷிஷ் வித்யார்த்திக்கு, விபத்து ஏற்பட்ட செய்தி அறிந்த திரையுலகினரும் ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய வேண்டி சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.