தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாபி தியோல் மிரட்டல் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வீடியோ இன்று வெளியான நிலையில் அரசியல் வசனங்களுடன் நடிகர் விஜய் மிகவும் மெர்சல் ஆக படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் இல்லையா என்பது ரசிகர்களின் பலநாள் சந்தேகமாக இருந்த நிலையில் தற்போது அது உறுதியாகிவிட்டது. அதாவது தெலுங்கு சினிமாவில் பாலையா நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன். மேலும் இந்த படத்தில் சில காட்சிகளை மட்டும் மாற்றி அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.