அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல காணொளி பதிவரான கப்ரூஜி என்பவர் இந்தியாவில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் போது கண்ணீர் மல்க வெளியிட்ட உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவில் தங்கியிருந்த தருணங்கள் தனது இதயத்தை ஆழமாகத் தொட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மீண்டும் தாய்நாடு திரும்புவதை நினைத்து வருத்தம் தெரிவித்ததுடன், தனக்கும் இந்தியாவின் அடையாள அட்டையான ஆதார் கார்டு வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் நகைச்சுவையாகவும் உணர்ச்சிகரமாகவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

https://www.instagram.com/reel/DSo77r4jvVt/?utm_source=ig_web_copy_link

இந்தியாவில் நிலவும் எளிமையான வாழ்க்கை முறை, எந்த நேரத்திலும் கிடைக்கும் தெருவோர உணவுகள் மற்றும் இந்திய மக்களின் மாறாத அன்பு ஆகியவை தன்னை வியக்க வைத்ததாகப் புகழ்ந்துள்ள அவரது இந்த வீடியோவை இதுவரை இருபத்தேழு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். வெளிநாட்டவர் ஒருவர் இந்திய கலாச்சாரத்தின் மீது கொண்டுள்ள இத்தகைய தீராத பற்று இந்திய இணையவாசிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.