சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு நபர் எந்தவொரு நிரந்தரக் கடையோ அல்லது பெரிய இயந்திரங்களோ இன்றி, மிகக் குறைந்த வசதிகளைக் கொண்டு வியக்கத்தக்க வகையில் காபி தயாரித்து விற்பனை செய்கிறார். தனது நெஞ்சுப் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஒரு பிரத்யேகப் பையில் காபி தூள், பால் பவுடர், சர்க்கரை மற்றும் கப்கள் என அனைத்துப் பொருட்களையும் நேர்த்தியாக அடுக்கி வைத்துள்ளார்.
மேலும் அத்தோடு தனது தோளில் ஒரு பெரிய தெர்மோஸ் பிளாஸ்க்கில் சுடுநீரைச் சுமந்து செல்லும் அவர், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்குச் சென்று சில நிமிடங்களிலேயே சுவையான காபியைத் தயாரித்து வழங்குகிறார். இந்தத் தனித்துவமான ‘மொபைல் கஃபே’ முயற்சி இணையதளவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
View this post on Instagram
“>
இந்த விலையுயர்ந்த இயந்திரங்கள் இல்லையென்றாலும், புத்திசாலித்தனமான ‘ஜுகாட்’ மூலம் எளிய முறையில் தொழில் செய்ய முடியும் என்பதை இந்த நபர் நிரூபித்துள்ளார். பலரும் இவரை “நடமாடும் காபி கடை” என்று பாராட்டுவதோடு, கடின உழைப்பும் புதிய சிந்தனையும் இருந்தால் எத்தகைய சவாலையும் எதிர்கொண்டு முன்னேறலாம் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
