உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் அதிவேகமாக வந்த வைக்கோல் பாரம் ஏற்றிய லாரி ஒன்று நிலைதடுமாறி, அந்த வழியாக வந்த துணைப்பிரிவு அலுவலரின் கார் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் நசுங்கியதில், காரை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த அதிர்ச்சியூட்டும் விபத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிக பாரம் ஏற்றி வந்த லாரி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து கார் மீது விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Rampur🚨⚠️
Disturbing Visuals🚨#Chaos around #Intersection
– Overloaded Lorry overturned on Bolero
– Bolero Driver does’t look like checked RV mirrors
– Everyone riding/driving everywhere 🤷♂️What’s with India DL?@DriveSmart_IN
pic.twitter.com/8Mnh2lz1HF— Dave (Road Safety: City & Highways) (@motordave2) December 28, 2025
“>
இந்த சம்பவத்தின் போது காரில் இருந்த மற்றவர்கள் குறித்த விரிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழந்த ஓட்டுநரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
