தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா, வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த அவர், அங்கிருந்து சென்னை திரும்பிய நிலையில் இந்த மருத்துவச் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், இது திட்டமிடப்பட்ட வழக்கமான பரிசோதனைதான் என்றும், தற்போது அவரது உடல்நிலை மிகவும் சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் நிம்மதி அடைந்துள்ளனர்