முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு, உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ராஷ்ட்ர ப்ரேரணா ஸ்தல் நினைவிடத்தைத் திறந்து வைத்தார். சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத் திறப்பு விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கூட்டத்தில் ஒரு பிரிவினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
One Nation One Samosa 😱
Just watched this Chaotic Video from a Modi event in Lucknow – ardent supporters throwing punches allegedly over Samosas! 😂#ModiHaiTohMumkinHai #BJPHatesBrahmin pic.twitter.com/vQQ5xO1neX
— তন্ময় l T͞anmoy l (@tanmoyofc) December 26, 2025
சிற்றுண்டி வழங்கப்பட்டபோது சிலருக்கு சமோசா கிடைக்கவில்லை என்ற காரணத்தால் ஏற்பட்ட இந்தத் தள்ளுமுள்ளுவில், மூன்று நபர்கள் ஒருவரைத் தரையில் தள்ளி சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பிரதமர் மேடையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே பின்னணியில் இந்த மோதல் அரங்கேறியது இணையவாசிகள் பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது.
மேலும், பிரதமர் லக்னோவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விழாவுக்காகச் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த அலங்காரப் பூந்தொட்டிகளைப் பொதுமக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு திருடிச் சென்ற மற்றொரு காணொளியும் வெளியாகி நிர்வாகத்தினருக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
