ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே உள்ள ஜட்னி பகுதியில், இஸ்லாமிய தெருவோர வியாபாரி ஒருவர் அவரது மத அடையாளத்திற்காகக் குறிவைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். வியாபாரம் செய்து கொண்டிருந்த அவரை வழிமறித்த கும்பல், மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டியதோடு, அவரது மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Location: Jatni, Bhubaneswar, Odisha
A Muslim street vendor was assaulted based on his religious identity and was forced to chant “Jai Shri Ram,” “Vande Mataram,” and “Modi Zindabad,” while being verbally abused. pic.twitter.com/EyBkFFnDw0
— The Muslim (@TheMuslim786) December 25, 2025
அந்த கும்பல் அந்த வியாபாரியைத் தாக்கியது மட்டுமன்றி, அவரை வலுக்கட்டாயமாக ஜெய் ஸ்ரீ ராம், வந்தே மாதரம், மோடி சிந்தாபாத் போன்ற சில குறிப்பிட்ட முழக்கங்களைச் சொல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். மனிதநேயமற்ற இந்தச் செயலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. உழைத்து வாழும் ஒரு சாதாரண மனிதரை, மதத்தின் பெயரால் இப்படித் துன்புறுத்துவது சமூகத்தின் அமைதியைக் குலைக்கும் செயல் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
