கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்த சிவகார்த்திகேயன் அங்கிருக்க, நடிகர் விஜய் அவரைப் பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அன்றைய சூழலில் ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்ற சிவகார்த்திகேயனின் நிலை இன்று ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
SK was made to stand aside for Vijay and was ignored by Vijay during the 2012 Nadigar Sangam elections.
13 yrs later, SK refuses to step aside and Vijay fans are crying.
Karma is real. pic.twitter.com/svjD01eBhC
— Trollywood 𝕏 (@TrollywoodX) December 25, 2025
சரியாக 13 ஆண்டுகள் கழித்து, இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் உயர்ந்து நிற்கிறார். தற்போது ஒரு கட்டத்தில் அவர் வழிவிட மறுப்பதாகவும், அதனால் விஜய் ரசிகர்கள் வருத்தப்படுவதாகவும் கூறி இந்த ‘கர்மா’ (Karma) பதிவுகள் வைரலாகின்றன. “காலம் ஒரு வட்டம்” என்பதற்கு ஏற்ப, அன்று ஒதுக்கப்பட்டவர் இன்று தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டி ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
