இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது நாட்டு அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு அனைவருக்கும் சவாலானதாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், வரப்போகும் அடுத்த ஆண்டு இதைவிட இன்னும் மோசமாகத்தான் இருக்கும் என்று கூறி எல்லோரையும் அதிர வைத்துள்ளார். பொதுவாகத் தலைவர்கள் புத்தாண்டு பிறக்கும்போது நம்பிக்கையூட்டும் வகையில் பேசுவார்கள், ஆனால் மெலோனி இப்படி எதார்த்தமாகப் பேசியது பலரையும் திகைக்க வைத்துள்ளது.
”அடுத்த ஆண்டு நிலைமை இன்னும் கடினமாகப்போகிறது, அதனால் இந்த விடுமுறை நாட்களில் முடிந்தவரை நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்” என்று அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஒரு நாட்டுப் பிரதமரே இப்படிப் பேசியிருப்பது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. “சும்மா பேச்சுக்காவது அடுத்த வருடம் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கலாம்” என சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் ஆதங்கத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
