மலேசியாவில் நடைபெறவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு அந்த நாட்டு அரசு சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது முற்றிலும் ஒரு சினிமா சார்ந்த நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், இதில் அரசியல் தொடர்பான எந்தவொரு பேச்சும் இடம்பெறக்கூடாது என்றும் மலேசிய அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இதனால், ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவிலும் நடிகர் விஜய் பேசும் அந்தப் புகழ்பெற்ற ‘குட்டி ஸ்டோரி’ இந்த முறை இடம்பெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும், விழாவிற்கு வரும் ரசிகர்கள் கட்சி கொடிகள், கட்சியின் லோகோ பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகள் அல்லது துண்டுகள் போன்ற எதையும் அணிந்து வரக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால் நடிகர் விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவராகப் பரிணமித்துள்ள விஜய்க்கு, வெளிநாட்டு மண்ணில் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடைகள் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
