சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வரும் ஒரு காணொலி, காண்போரின் நரம்புகளை உறைய வைத்துள்ளது. மிருகக்காட்சிசாலை ஒன்றில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஒன்று, மின்னல் வேகத்தில் வெளியே பாய்ந்து வரும் அந்தக் காட்சிகள், “மரணத்தை மிக அருகில் காண்பது போன்ற” உணர்வைத் தருவதாக இணையவாசிகள் தங்களது அச்சத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
मौत को इतने करीब से देखना! 🐆
जब एक तेंदुआ पलक झपकते ही पिंजरे से बाहर आ गया। वीडियो देखकर रोंगटे खड़े हो जाएंगे। आपको कैसा महसूस हुआ कमेंट में बताएं?😰👇 pic.twitter.com/PhCx5kcZUK— Roshni p (@roshnipar0786) December 18, 2025
சுமார் 60,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ள இந்தக் காணொலியின் தத்ரூபமான தன்மை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து எழுந்த விவாதங்களுக்குப் பதிலளித்த வீடியோவைப் பகிர்ந்த நபர், இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை வீடியோ என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நிஜம் எது, நிழல் எது என்று கண்டறிய முடியாத அளவிற்குத் தத்ரூபமான படைப்புகள் உருவாவது ஒருபுறம் வியப்பை அளித்தாலும், இத்தகைய வீடியோக்கள் பொதுமக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்தக்கூடும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், தவறான தகவல்களைப் பரப்ப இதனைப் பயன்படுத்தக் கூடாது என்றும் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
