சமீபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சீருடை அணியாத மர்ம நபர் ஒருவர் தன்னை டி.டி.இ என அடையாளப்படுத்திக் கொண்டு பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் முறையான அடையாள அட்டை ஏதுமின்றி, ஸ்லீப்பர் கோச் பெட்டியில் நுழைந்து டிக்கெட் இல்லாத பயணிகளிடம் பேரம் பேசி பணம் வசூலிக்க முயன்றுள்ளார்.

மேலும் அவருடைய நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பயணி ஒருவர், அந்த நபரின் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளமான ரெடிட்டில் பதிவிட, அது தற்போது வைரலாகி ரயில்வே பாதுகாப்பு குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்தச் சம்பவமானது இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு ஓட்டைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக சமூக வலைதள பயனர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த மர்ம நபர் அதிகாரப்பூர்வமான ரசீது புத்தகத்தைப் போன்ற ஒன்றை வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பயணிகளிடம் அவர் நடந்து கொண்ட விதம் மற்றும் டிக்கெட் கட்டணத்திற்காக அவர் செய்த பேரம் போன்றவை அவர் ஒரு போலி அதிகாரி என்பதை உறுதிப்படுத்தின.ரயில்வே நிர்வாகம் இத்தகைய போலி அதிகாரிகளைக் கண்டறிந்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.