குஜராத் மாநிலம் மெக்சானா மாவட்டம் மோதிடாவு பகுதியில் உள்ள உத்கர்ஷ் வித்யாலயா பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆசிரியர் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். தேர்வு முடிந்த பிறகு அந்த மாணவர் நண்பர்களுடன் கேலி செய்து விளையாடியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், ஒரு குச்சியால் மாணவரைத் தாக்கியதில் அவரது தலை, கை மற்றும் கால்களில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அந்த மாணவர் சிகிச்சைக்காக மெக்சானா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Student injured in thigh after teacher hits him with stick while having fun at Mehsana Utkarsh Vidyalaya
byu/Altruistic-Issue-887 ingujarat

இந்தச் சம்பவம் குறித்து மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர் தரப்பில் கூறுகையில், மாணவர் ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்டதால் கண்டிப்புக்காகவே தண்டித்ததாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், பள்ளிகளில் மாணவர்களை உடலால் தண்டிப்பது சட்டப்படி குற்றம் என்பதால், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.