தமிழகத்தில் நடிகர் விஜய் புதிதாக தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் முதல் மாநாட்டின் போதே கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்திற்கு பங்கு கொடுக்கப்படும் என்றார். இருப்பினும் நடிகர் விஜயுடன் இதுவரை எந்த கட்சியும் அதிகாரப்பூர்வ கூட்டணியை உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே திமுக கூட்டணியில் விசிக, சிபிஎம், மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இருக்கும் நிலையில் புதிதாக மக்கள் நீதி மய்யம் ஆட்சியும் இணைந்து கூட்டணி பெரும்பான்மையுடன் தேர்தலை சந்திக்கிறது.

இதே போன்று அதிமுக மற்றும் பாஜக கூட்டணியும் வலுவாக இருப்பதாக கூறப்படுகிறது. பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. இன்னும் சில சிறிய கட்சிகளும் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவுகளை வழங்கி வருகிறது. நடிகர் விஜய் வெளிப்படையாக ஆட்சியில் பங்கு கொடுப்பதாக அறிவித்த போதிலும் இதுவரையில் எந்த கட்சியும் அவருடன் கூட்டணி வைக்கவில்லை.

இதன் காரணமாக 2026 தேர்தலில் நடிகர் விஜய் தனித்து போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் முதல்வர் வேட்பாளராக விஜயை தீர்மானித்துள்ளதால் அவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுக்கு மட்டுமே கூட்டணியில் சேர்த்துக்கொள்ளப்படும் என ஏற்கனவே அந்த கட்சி வட்டாரங்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் தமிழகத்தில் கண்டிப்பாக புதிதாக அரசியல் கட்சி தொடங்கினாலும் எம்ஜிஆர் போன்று தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று முதலமைச்சராக மாறுவேன் என விஜய் உறுதியுடன் கூறி வருவதால் அவர் புதிய வரலாற்றை எழுதுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.