தலைநகர் டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் கார் ஓட்டுநரை கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த காவலர் ஓட்டுநரை காரில் இருந்து வெளியே இழுத்து, முகத்தில் குத்தியும் அடுத்தடுத்து பலமுறை கன்னத்தில் அறைந்தும் அராஜகத்தில் ஈடுபடுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

மேலும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய சட்ட அமலாக்கப் பிரிவினரே இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் அந்த காவலரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“>

இந்நிலையில் அதிகார துஷ்பிரயோகம்” என்றும், தவறு செய்திருந்தால் சட்டப்படி அபராதம் விதிக்கலாமே தவிர, கையை ஓங்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.  இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர் மீது டெல்லி காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.