சென்னையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) முன்னிலையில், தவெக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு இபிஎஸ் அவர்கள் கட்சித் துண்டு போர்த்தி வரவேற்றார்.
இந்த இணைப்பு விழாவை அதிமுக ராஜ்ய சபா எம்பி தனபால் ஏற்பாடு செய்திருந்தார். புதிதாக இணைந்தவர்கள் அனைவரும் தேர்தல் பணிகளில் ஆர்வமுடன் பங்கேற்று, அதிமுகவின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என இபிஎஸ் வேண்டுகோள் விடுத்தார்.
