தெற்கு சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைக்கும் (RSF) இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நீடித்து வரும் நிலையில், கோர்டோபான் மாகாணத்தில் உள்ள கலோகி நகரில் உள்ள மழலையர் பள்ளி மீது துணை ராணுவப் படை  ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலில் பள்ளி குழந்தைகள் 33 பேர் உட்பட மொத்தம் 50 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் முழு விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை என்றும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.