திராவிட இயக்கப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) நேற்று (டிசம்பர் 5) இணைந்தார். முன்னதாக, மதிமுக மற்றும் அதிமுகவைத் தொடர்ந்து திமுகவில் இருந்து வந்த அவர், தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.

நாஞ்சில் சம்பத் தற்போதுத் தவெகவின் பிரச்சாரச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் இணைந்து பணிகளை மேற்கொள்வார் என்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாஞ்சில் சம்பத்தைத் தொடர்ந்து, குமரி முத்துக்குருஷ்ணன் என்ற மற்றொரு மூத்தத் தலைவரும் விஜய்யின் கட்சியில் இணைந்துள்ளார். இவர் எம்.ஜி.ஆர். காலத்தில், 1980-இல் குமரி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர்.

2026 தேர்தல் களம் பரபரப்படைந்துள்ள நிலையில், மாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் இணைக்கும் முயற்சியில், விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தீவிரம் காட்டுவது அரசியல் கவனத்தைப் பெற்று வருகிறது.