நடிகர் சூரி தனது படப்பிடிப்பின்போது நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவத்திற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது படப்பிடிப்பு தளத்தில் பவுன்சர்கள் பொதுமக்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாக ஒரு ரசிகர் சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த சூரி, உடனடியாக அந்த செயலுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
அன்புள்ள @sooriofficial அண்ணா உங்கள் பட சூட்டிங் எங்கள் ஊரில் நடப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே இரவு நேர படப்பிடிப்பில் வேடிக்கை பார்க்க வரும் எங்கள் பகுதி மக்களிடம் உங்களது பவுசன்கர்கள் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்
தயாரிப்பு நிறுவனத்திடம் கொஞ்சம் சொல்லி வைக்கவும் நன்றிகள்— தோழன் 🦂அராத்து (@abbasofficial20) December 4, 2025
“>
