​நடிகர் விஜய்யின் புதுச்சேரி பயணம் மற்றும் கட்சிசார் நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வரும் நிலையில், வரும் 5-ஆம் தேதி அவர் திட்டமிட்டிருந்த ‘ரோடு ஷோ’ (Road Show) திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை பெய்யும் சூழல் காரணமாக இந்த திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அவரது தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த முடிவுக்குப் பின்னால் காவல்துறை அனுமதி மறுத்த விவகாரம் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிகிறது.

முன்னதாக, புதுச்சேரி மாவட்ட காவல்துறை, ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி தர இயலாது என்றும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, அதற்குப் பதிலாக திடலில் பொதுக்கூட்டமாக நடத்திக் கொள்ளும்படியும் அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்த ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது, நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு ஏற்பட்ட முதல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.