மகாராஷ்டிராவின் சதாரா (Satara) மாவட்டத்தில், புனே-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் (Pune-Bengaluru National Highway), காரட் அருகே உள்ள வாதார் கிராமம் (Vathar Village) பகுதியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்தப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பல மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்தனர்.
கல்விச் சுற்றுலா சென்ற அந்தப் பேருந்தில் சுமார் 40 முதல் 45 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்துள்ளனர். விபத்து நடந்தவுடன், உள்ளூர் மக்கள், நெடுஞ்சாலைக் கண்காணிப்புக் குழு மற்றும் போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்துப் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
पुणे-बेंगलुरु नेशनल हाईवे पर सातारा जिले के कराड के पास वाठार गाँव की सीमा में एक बड़ा सड़क हादसा हुआ.छात्रों से भरी बस हाईवे से करीब 20 फीट नीचे गिर गई. बस में करीब 40-45 छात्र और शिक्षक सवार थे. घायलों को तुरंत कृष्ण अस्पताल में इलाज के लिए भर्ती कराया गया है.#Pune… pic.twitter.com/cpDTgw7gAG
— NDTV India (@ndtvindia) December 2, 2025
விபத்தில் காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனைக்கு (Krishna Hospital) கொண்டு செல்லப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில மாணவர்கள் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், சிலர் கடுமையாகக் காயமடைந்துள்ளனர்.
தற்போது அனைவரின் நிலைமையும் சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாடின்மையே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
