சமூக வலைத்தளங்களில் வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் பல வீடியோக்கள் வைரலாவது வழக்கம். தற்போது, அப்படியான ஒரு வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. பொதுவாக, ஓடும் காருக்குள் அமர்ந்து ஸ்டண்ட் செய்வது சாதாரணமாகப் பார்க்கப்பட்டாலும், இந்த வீடியோவில் ஒரு நபர் அதை ஒரு படி மேலே சென்று, காரின் போனட்டில் அமர்ந்தபடி மிகவும் ஆபத்தான ஸ்டண்ட் செய்கிறார்.

வீடியோவில், சிவப்பு நிற காரில் கதவைத் திறந்து வைத்தபடி பயணிக்கும் ஒரு நபர், திடீரென அதிலிருந்து இறங்குகிறார். ஆனால் அதோடு நிற்காமல், அவர் காரின் போனட்டைத் திறந்து அதன் உள்ளே நுழைந்து, அங்கிருந்தபடியே ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக்கை அழுத்தி காரை வட்டமாகச் சுழற்றுகிறார். கார் தயாரித்த நிறுவனமே இப்படி ஒரு ஸ்டண்ட் செய்ய முடியும் என்று நினைத்திருக்காது என பலரும் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவிக்கின்றனர்.

“>

 

 

ஸ்டண்ட்மேன்கள் காரின் உள்ளே அமர்ந்து செய்யும் சாகசத்தை, இவர் காரின் போனட்டில் அமர்ந்து செய்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எனினும், இது மிகவும் ஆபத்தானது மற்றும் உயிரைப் பணயம் வைக்கும் செயல் என்றும் பல பயனர்கள் எச்சரித்துள்ளனர்.