தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சி அமைப்பினை வலுப்படுத்தும் வகையில் பூத் ஏஜெண்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு ஏஜெண்டு என்ற எண்ணிக்கையை 10 ஆக உயர்த்த அண்மையில் தவெக அறிவுறுத்தியிருந்தது. இந்த இலக்கினை அடைவதற்காக, பூத் ஏஜெண்டுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை விரைந்து பூர்த்தி செய்து தலைமைக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு தவெக தரப்பிலிருந்து முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில், கட்சிப் பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
